முந்தய பக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

16 May 2026, 11:16 pm
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்
<p><strong>நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்</strong></p><p>விருதுநகர், மே 16- ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்ப தோடு, அவர்களின் உயி ரைக் குடிக்கும், மோசடி யான நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் திருப்பதி தலைமையேற் றார். கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.முருகன், திமுக சார்பில் அசோக், மதியழகன், சிபிஐ சார்பில் பாண்டியன், மதி முக சார்பில் குமரேசன், விசிக சார்பில் சக்திவேல் ஆகியோர் பேசினர். முடி வில் ஆசிரியர் நல்லதம்பி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram