நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
18 May 2026, 12:00 am
<p><strong>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் </strong></p><p>நீட் தேர்வை எதிர்தது வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இ.தமிழ்தரணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, திமுக மருத்துவரணி தலைவர் தி.ச.முகமதுசயி, விசிக மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், மதிமுக மாவட்ட செயலாளர் ஜி.கோபி, திக மாநில மகளிரணி துணைசெயலாளர் தேன்மொழி மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டு உரையாற்றினர்.</p><p>நீட் தேர்வை எதிர்த்து நெமிலி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை (மே 16) திராவிடர் கழகம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க மாநில குழு உறுப்பினர் எல்லப்பன் தலைமை தாங்கினார். இதில் திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, தேமுதிக நிர்வாகிகள் கலநது கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். சிபிஎம் அரக்கோணம் தாலுக்கா செயலாளர் ஆர். வெங்கடேசன் கலந்து கொண்டு, நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் உரையாற்றினார்.</p>
