சிதம்பரம் அரசு மருத்துவமனை நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>சிதம்பரம் அரசு மருத்துவமனை நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சிதம்பரம், மார்ச் 28- கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் நில வும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடு களைக் கண்டித்தும், நோயாளி களுக்குத் தரமான சிகிச்சை வழங்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரிக்கை: சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் நகரத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பு இல்லாதது மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் ஏழை எளிய நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் ஏற்படும் உயி ரிழப்புகளைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இந்த முழக்க ஆர்ப்பாட்ட த்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வினோத் குமார், பொருளாளர் கலைவாணன், சிதம்பரம் நகரச் செயலாளர் ராகுல், நகரப் பொருளாளர் சதீஷ், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் கவியரசன் மற்றும் பரங்கிப்பேட்டை சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களுக்கு உயர்தரச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யாவிட்டால், அடுத்த கட்ட மாகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
