தடங்கம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு
7 Feb 2026, 5:37 pm
<p><strong>தடங்கம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு</strong></p>
<p>தருமபுரி, பிப்.7- தடங்கம் பகுதியிலுள்ள குப்பைக்கிடங் கில், குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி குப்பை வாகனங்களை தடுத்து நிறுத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யம், தடங்கம் பகுதியில், நகராட்சியின் திடக் கழிவு மேலாண்மை திட்ட குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சியில் உள்ள 33 வார்டு களில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப் பைக்கழிவுகள், வாகனங்களில் எடுத்து வரப் பட்டு, கொட்டப்பட்டு வந்தது. மலைபோல் குவிந்திருந்த குப்பைக்கழிவுகள் அவ்வப் போது தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக காணப்பட் டது. இதனால் இப்பகுதியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த சில நாட்களாக குப்பைக்கழிவுகள் கொட்டப்படவில்லை. இந்நிலையில் வெள் ளியன்று, நகராட்சி குப்பைக்கழிவுகளை 3 வாகனங்களில் எடுத்துக்கொண்டு, தடங்கம் பகுதியில் கொட்டுவதற்காக வந்தனர். இத னைப்பார்த்த பொதுமக்கள், சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, நகராட்சி வாகனங்களை தடுத்து, கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், பொதுமக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, வேறு வழியின்றி குப்பைக்கழிவுகளுடன் வாகனங்களை திருப்பி எடுத்துச்சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>
