முந்தய பக்கம்

குப்பை கொட்ட எதிர்ப்பு: போராட்டம்

19 Nov 2025, 3:33 pm
குப்பை கொட்ட எதிர்ப்பு: போராட்டம்
<p><strong>குப்பை கொட்ட எதிர்ப்பு: போராட்டம்</strong></p> <p>திருப்பூர், நவ.19- முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் &nbsp;புதனன்று மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட் டம் நடத்தினர். திருப்பூர், காங்கேயம் சாலை, முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டியதால் அப்பகுதி நிலத்தடி நீரில் உப்பின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. &nbsp;அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர் வாகம் மேற்கொள்ளவில்லை. மீண்டும் அதே பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு மாநகராட்சி &nbsp;நிர்வாகம் &nbsp;நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி முதலிபாளை யம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் புதனன்று பாய், தலை யணையுடன் வந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை யில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினர். இப்போராட் டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது &nbsp;செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு &nbsp;சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram