முந்தய பக்கம்

சாதிய ஆணவப் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 11:39 pm
சாதிய ஆணவப் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>சாதிய ஆணவப் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூலை 20- சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து திராவிட தமிழர் கட்சி சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் சாதிய ஆணவப் படு கொலைகளை கண்டித்தும், உடனடியாக இதனை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திராவிடர் தமிழர் கட்சி யின் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு அரசை கண்டித்தும், சிறப்புச் சட்டம் இயற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத் திற்குத் திராவிடர் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் வெண் மணி தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராம கிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram