பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
22 May 2026, 9:51 pm

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 22- பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தி மக்களின் வாழ்க்கை மீதான மோடி அரசின் தாக்குலை கண்டித்தும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகர் மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் ஜெம்புநாதபுரம் கிராமத்தில் சிபிஎம், வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பாண்டியன், வாலிபர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் பாலகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.

மணப்பாறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் இந்திரஜித் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் கூறினார்.

திருவெறும்பூர் வடக்கு தெற்கு கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றியச் செயலாளர் குருநாதன் தலைமை வகித்தார்.

புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார், சிபிஐ முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர்கள் கடல்மணி, ராமானுஜம் ஆகியோர் உரையாற்றினர்.

பெரம்பலூர் சிபிஎம், சிபிஐ பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கி ழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கருணா நிதி தலைமை வகித்தார்.

கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பெ. ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகஸ்டின், மாவட்ட குழு உறுப்பினர் இரா. எட்வின், ராமகிருஷ்ணன் மற்றும் சிபிஐ நிர்வாகிகள், சிபிஎம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இடதுசாரி கட்சிகளின் செயலாளர்கள் எம். நாகராஜன், ஆர்.எஸ். சுந்தரய்யா, எஸ். செல்வம், எம்.டி. கேசவராஜ் தலைமையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சந்திரசேகர ஆசாத், சிபிஐ(எம்.எல்) மாவட்டச் செயலாளர் தனுஷ் பாண்டியன், விசிக மாவட்டச் செயலாளர்கள் என்.டி.இடிமுரசு தங்க.

தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் இடதுசாரிகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. முருகானந்தம், பா.கோமதிகலந்து கொண்டனர். கொரடாச்சேரி கொரடாச்சேரி வெட்டற்றுப்பாலம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் ஒன்றியச் செயலா ளர்கள் உரையாற்றினார்.

குடவாசல் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.லெனின், நகரச் செயலாளர் டி.ஜி. சேகர், சிபிஐ எஸ்.ஏ. டேவிட் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினார். வலங்கைமான் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலங்கை மான் ஒன்றியச் செய லாளர்கள் எஸ்.எம்.செந்தில்குமார், எஸ்.இளங்கோவன் தலை மையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, சிபிஐ மாவட்ட நிர்வாக உறுப்பினர் குழு கு. ராஜா ஆகியோர் உரையாற்றினர்.

நீடாமங்கலத்தில் பெரியார் சிலை அருகே ஒன்றியச் செயலாளர்கள் சிபிஐ டி.கே. மார்க்ஸ், டி.ஜான் கென்னடி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ராதா உரையாற்றினார். இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தீன.

கௌதமன், நன்னிலம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், நகர செயலாளர் ஜி.செல்வம், விசிக ஒன்றிய செயலாளர் சேதுராமன் ஆகியோர் தலைமையில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார்.

குடவாசல் வடக்கு ஒன்றி யம், எரவாஞ்சேரி கடை வீதியில் ஒன்றியச் செயலாளர் கே. தமிழ்ச்செல்வி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் கரூரில், தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு, சிபிஐ (எம் எல்) மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாநகரச் செயலாளர் எம். தண்டபாணி, சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.கலாராணி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. மருகேசன், சி.ஆர். ராஜாமுகமது, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.