தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிவாயு, எரிபொருட்கள் விலை உயர்விற்கு எதிர்ப்பு

8 Jun 2026, 10:57 pm
எரிவாயு, எரிபொருட்கள் விலை உயர்விற்கு எதிர்ப்பு

எரிவாயு, எரிபொருட்கள் விலை உயர்விற்கு எதிர்ப்பு

ஒன்றிய அரசை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆவேசம்

கோவை, ஜூன் 8- பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட் ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். சமையல் எரி வாயு மற்றும் வணிக எரிவாயு விலையை குறைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அதன்ஒருபகுதியாக கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ. உஷா தலைமை வகித்தார். இதில் சங்க மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, அமுதா, மாவட்டப் பொருளாளர் தங்கமணி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணகி ஜோதி பாசு, என்.சுமதி, காரமடை நகர் மன்ற உறுப்பினர் பிரியா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன் னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் கள் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கண்டன முழக்கங் களை எழுப்பினர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் வைர மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தேவி, மாவட்ட துணைத் தலைவர் ஐ.ஞானசௌந் தரி, மாவட்ட துணைச் செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். ஈரோடு ஈரோடு ஜவான்பவன் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் என்.கலாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஜெ.அருந்ததி, மூத்த தோழர் பி.எஸ்.பிரசன்னா ஆகியோர் கண் டன உரையாற்றினர். தாலுகா செய லாளர் எஸ்.தனலட்சுமி நன்றி கூறி னார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மாதர் சங்க நகரச் செய லாளர் நிர்மலா ராணி தலைமை வகித்தார் இதில், மாவட்டச் செயலா ளர் ஆர். மல்லிகா மாவட்டப் பொரு ளாளர் சரண்யா, தருமபுரி ஒன்றியச் செயலாளர் தமிழ்மணி உள்ளிட் டோர் உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.