பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை வெளியேற்ற எதிர்ப்பு!
15 Nov 2025, 4:09 pm
<p><strong>பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை வெளியேற்ற எதிர்ப்பு!</strong></p>
<p>பொள்ளாச்சி, நவ.14- பொள்ளாச்சி அருகே 70 ஆண்டுகளாக குடியிருந்து வரு வோரை, திடீரென வெளியேற்ற நடைபெறும் முயற்சிக்கு அப் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலுள்ள மரப்பேட்டை பகுதியில் நில வாடகை பெற்று 70 ஆண்டுகளாக சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனி யார் ஒருவர் இப்பகுதி மக்கள் குடியிருக்கும் பகுதி தமக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அவ்வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே வீடுகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை யறிந்து அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். 70 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் எங்களை, எங்களுக்கே தெரியாமல் ஒருவர் பட்டா வாங்கி வேறொரு வருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது நீதிமன்றத் தின் மூலம் எங்கள் வீடுகளை காலி செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. வழக்கு சம்பந்தமாக எங்களுக்களிடம் தெரிவிக்காமலும், மேல் முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கா மலும், வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்காமலும், உட னடியாக வீடுகளை காலி செய்ய பிறபித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள் ளனர்.</p>
