தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தல் தமிழகத்தில் 12 இடங்களில் மாணவர்கள் - வாலிபர்கள் பேரணி
9 Oct 2026, 10:53 pm

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தல் தமிழகத்தில் 12 இடங்களில் மாணவர்கள் - வாலிபர்கள் பேரணி

சென்னை, அக். 9 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரியும், தில்லியில் போராட்டம் நடத்துவோர்மீது ஒடுக்குமுறையை ஏவும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் வெள்ளி யன்று (அக்.9) 12 இடங்களில்மாணவர்கள், வாலிபர்கள் போராட்டம் நடத்தினர்.இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடு துறை, மதுரை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சேலம் ஆகிய 12 இடங்களில் பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.மிருதுளா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், பொருளாளர் தீ. சந்துரு, துணைத்தலைவர் அபிராமி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.பார்த்திபன், மாணவர் சங்க மத்தியக்குழுஉறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், “வாக்குத் திருட்டில்ஈடுபட்ட ஞானேஷ்குமாரை கண்டித்து ஒரு வார காலமாக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது,தற்போது தமிழகம் முழுவதும் பேரணி நடைபெறுகிறது.அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வாக்குரிமையை பறித்த ஞானேஷ்குமாரை பதவி விலகச் செய்து, கைதுசெய்யக்கோரி, அக்டோபர் 10 அன்று நடைபெறும் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்து, தில்லி நகரைமூடியுள்ளனர்.

ரயில்நிலையங்கள், விமானநிலை யங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, ஒன்றியஅரசின் இத்தகைய ஒடுக்குமுறை களைக் கண்டித்தும் இந்த பேரணி நடைபெறுகிறது. தில்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்” என்றார்.