முந்தய பக்கம்

வாக்குத் திருடனே, வெளியேறு!

10 Oct 2026, 9:55 pm
வாக்குத் திருடனே, வெளியேறு!
<p><strong>வாக்குத் திருடனே, வெளியேறு!</strong></p><p>தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, அக்டோபர் 10 சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட போராட்டத்திற்கு, ஒன்றிய பாஜக அரசு வரலாறு காணாத தடைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் உதவியுடன் அந்த தடைகளை மாணவர்கள் - இளைஞர்கள் தவிடு பொடியாக்கினர். அணி அணியாக திரண்ட அவர்கள், தில்லியை போராட்டக்களமாக மாற்றி, மோடி - அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்தனர். அடக்குமுறைகளால் தங்களை ஒடுக்கிவிட முடியாது; வாக்குத் திருடன் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என்ற முழக்கங்களை தில்லியெங்கும் எதிரொலிக்கச் செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram