தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாம்பவர்வடகரையில் கழிவுநீர் ஓடையில் கலையரங்கம் கட்டுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

6 Oct 2026, 9:42 pm
சாம்பவர்வடகரையில் கழிவுநீர் ஓடையில் கலையரங்கம்  கட்டுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>சாம்பவர்வடகரையில் கழிவுநீர் ஓடையில் கலையரங்கம் கட்டுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, அக். 06-தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கீழப்பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் ஓடையில் கலையரங்கம்கட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.</p><p>சாம்பவர்வடகரை கீழப்பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் என். நேதாஜி தலைமை வகித்தார். 1-வதுவார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவருமான எம். பழனிகுமார், முன்னாள் திமுக நகரச்செயலாளர் வை. ராமச்சந்திரன், தொமுச முன்னாள் செயலாளர் எஸ். ராமகிருஷ்ணன், 15-வதுவார்டு திமுக கவுன்சிலர் து. ரபீக் ராஜா உள்ளிட்டோர், சிபிஎம் வட்டாரச் செயலாளர் சு.பட்டாபிராமன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் மு. கதிரவன், முன்னாள் செங்கோட்டை யூனியன் சேர்மன் பி. சட்டநாதன் ஆகியோர் பேசினர். கழிவுநீர் செல்லும் ஓடை பகுதியில் கலையரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.எனவே அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்து, கழிவுநீர் ஓடையை முறையாகப் பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.