100 நாள் வேலைத் திட்ட மசோதா நகல் எரிப்புப் போராட்டம்
20 Dec 2025, 3:38 pm
<p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பண்ருட்டியில் சட்ட மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இதில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
