தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

8 Jan 2026, 2:44 pm
சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து  ஆர்ப்பாட்டம்
<p><strong>சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து &nbsp;ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, ஜன.8- சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து சமூக நல்லிணக்க மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் நாளன்று, இந்துத்துவா குண்டர்கள் நாடு &nbsp;முழுவதும் திட்டமிட்டு நடத்திய தாக்குலை கண்டித்தும், இத் தகைய குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என வலியுறுத்தியும், சமூக நல்லினக்க மேடை சார்பில் &nbsp;புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் &nbsp;இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், மகளிரணி மாநில &nbsp;அமைப்பாளர் தமிழ் செல்வி, மனிதநேய ஜனநாயக கட்சி &nbsp;மாவட்டச் செயலாளர் இம்ரான், மனிதநேய மக்கள் கட்சி &nbsp;மாவட்டத் தலைவர் என்.சுபேதார், முஸ்லிம் லீக் மாவட் டச் செயலாளர் சிராஜூதீன், விசிக செயலாளர்கள் கோட்டை &nbsp;கலைவாணன், மின்னல் சக்தி, மாதர் சங்க முன்னாள் செயலா ளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டச் செயலாளர் ஏ.ஜெயா, விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை இதேபோன்று, கோவை சிவானந்த காலனியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் தலைவர் ஜெரோம் ரோட்ரிக் தலைமையேற்றார். மாவட் டச் செயலாளர் சாதிக்பாட்சா, ஒருங்கினைப்பாளர் என்.ஆர். முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வா கிகள் குழந்தைராஜ், ஆரோக்கியசாமி, டேவிட், மரிய அந்தோ ணிராஜ், மாசிலாமணி, சலிம், லாரன்ஸ், பங்கஜவல்லி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில் செல்வராணி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.