தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

21 Jul 2026, 10:42 pm
மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 21- நீட் முறைகேட்டை கண்டித்து தலைநகர் தில்லியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத் திய ஒன்றிய அரசை கண்டித்து பல் வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை கண் டித்து தில்லியில் அமைதியான முறை யில் பேரணி சென்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்கு தலை கண்டித்து, கோவை நீதிமன் றம் முன்பு அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் மற்றும் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் வழக் கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நீட் முறைகேடுகளை கண் டித்தும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி முழக்கங் களை எழுப்பினர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட் டத் தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங் கத்தின் மாநிலப் பொருளாளர் மாசேதூங், மாவட்டச் செயலாளர் ஜோதிகுமார், வழக்கறிஞர் வெண் மணி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கோபால்சங்கர், வழக்கறிஞர்கள் நிக்கோலஸ், சா பாலமுருகன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். இதேபோன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து முற்போக்கு அமைப்பு களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையேற்றார். இதில், புரட்சி கர இளைஞர் முன்னனி நிர்வாகி மலரவன், திவிக நேருதாஸ், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் உரையாற்றி னர். மாணவர் சங்கம் சேலம் அரசு கலைக்கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் கமல் நாத், நிர்வாகிகள் ரிஷி, மோகன பிரசாத், வைரவேல், முகில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று. சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம் மற் றும் மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட் டச் செயலாளர் நேதாஜி தலைமை யில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்கம் திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை வட்டக்கிளை செயலாளர் வெங்கி டுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் அம்சராஜ், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தருமபுரி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்ட இணைச்செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் ஏ.தெய்வானை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நல்லம் பள்ளியில் மகளிர் துணைக்குழு உறுப்பினர் பெ.மகேஸ்வரி, அரூரில் வட்டத் தலைவர் வீரமணி, பாப்பி ரெட்டிப்பட்டியில் வட்டத் தலைவர் மோகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.