அனந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>அனந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், அனந்தபுரம் ஊராட்சி கைலாசபுரம் கிராமத்தில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பெருமாள் என்பவருக்கு குடிநீர் தர மறுத்துவரும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அனந்தபுரம் ஊராட்சி அலுவலக முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ப. செல்வன், வட்டார செயலாளர் இரவிதாசன், விவசாயிகள் சங்க நிர்வாகி உதயகுமார், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் சிவாஜி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
