தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

5 Mar 2026, 3:59 pm
அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கோவை, மார்ச் 5 ஈரான் மீது நடத்தப்படும் தாக்கு தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா, இஸ்ரேலின் அடா வடித்தனத்தை கண்டித்து, மாண வர், மாதர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் உலக &nbsp;நாடுகளிடையே பெரும் பதற் றத்தை உருவாக்கியுள்ளது. குறிப் பாக, ஈரான் நாட்டின் மீது நடத்தப் படும் ராணுவத் தாக்குதல்கள் மற் றும் வான்வழித் தாக்குதல்கள் சர் வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக &nbsp;மாறியுள்ளன. இந்தச் சூழலில், ஏகா திபத்திய நாடுகளின் ஆக்கிர மிப்புப் போக்கை கண்டித்தும், அப்பாவி மக்களின் உயிரைப் பறிக் கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள &nbsp;வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழு வதும் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் &nbsp;சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாண வர் சங்க மாவட்டத் தலைவர் கு. பாவெல் தலைமை தாங்கினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் கள் ரங்கசாமி, பிரசாந்த் உள்ளிட்ட &nbsp;ஏராளமானோர் கலந்து கொண்ட னர். சேலம் சேலம் மாவட்டம், அரசு கலைக் &nbsp;கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரிஷி தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் டார்வின் கண்டன &nbsp;உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் கோகுல், &nbsp;மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜீவா, நவீன், முகில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக போரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பூர் திருப்பூர் புதிய பேருந்து நிலை யம் முன்பு வியாழனன்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க திருப்பூர் வடக்கு &nbsp;ஒன்றியச் செயலாளர் எஸ்.பானு மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் &nbsp;தலைவர் &nbsp;எஸ்.பவித்ரா தேவி, செய லாளர் எஸ்.பானுமதி, துனைத் தலைவர் சகிலா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக் குழு உறுப்பினர் பி.லட்சுமி, நிர்வாகி கள் ஆர்.கே.செல்வி, மினி, ஜானகி, &nbsp;நிஷா உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.