ஏசிபி விவேக் பகத் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
5 Oct 2026, 8:33 pm
<p><strong>ஏசிபி விவேக் பகத் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!</strong></p><p>புதுதில்லிஅக்டோபர் 3 அன்று தில்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, 3 பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் உதவிஆணையர் (ஏசிபி) விவேக் பகத் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்)பதிவு செய்ய வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள்இணைந்து ஜெய் சிங் சாலையில் உள்ள தில்லி காவல்துறை தலைமையகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர்ஆஷா சர்மா, தில்லி மாநிலத் தலைவர் ஆஷா யாதவ், பொருளாளர் ரேணு சர்மா, துணைத்தலைவர் மைமூனா முல்லா மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் சர்பாணி சர்க்கார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.அதே சமயம் ஆர்ப்பாட்டத்தின் போது, ஏசிபி விவேக் பகத் மீது வழக்குப் பதிவு செய்யமறுப்பதுடன், புகார் அளித்த பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை அராஜகமான முறையில் பலத்தைப் பிரயோகித்துக் கைது நடவடிக்கைமேற்கொண்டு வருவதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்தசில நாட்களாக ‘பெயர் விவரப் பட்டை’ (Nametag) கூட அணியாத காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருவதற்கு மாதர் சங்கம் உட்பட பல்வேறு பெண்கள் அமைப்புகள் சாடின.</p>
