சாலை வசதி கோரி போராட்டம்!
27 Jan 2026, 3:28 pm
<p><strong>சாலை வசதி கோரி போராட்டம்!</strong></p>
<p>சேலம், ஜன. 27- சேலம் ஜங்ஷன் அருகே முறையான சாலை வசதி செய்து தர வலியுறுத்தி, ரயில்வே கோட்ட அலுவல கம் முன்பு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் போடிநாயக்கன் பட்டி அருகே உள்ள ஆண்டி பட்டி, சிவதாபுரம், பனங் காடு, சித்தர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சேலம் ஜங்ஷன் பகுதிக்குச் செல்ல தற்போதுள்ள ரயில்வே பாலத்தின் அடியில் உள்ள குறுகிய பாதையையே பயன்ப டுத்தி வருகின்றனர். தற்போதுள்ள இந்த நடைபாதையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவ சர கால வாகனங்கள் கூட செல்ல முடியாத அவலநிலை நீடிக்கிறது. மக்கள் கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். இந்நிலையில், மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படாததால், செவ் வாயன்று சேலம் ரயில்வே கோட்ட அலுவல கத்திற்கு பூட்டுப் போடும் போராட்டத்திற்கு பொதுமக்கள் அழைப்பு விடுத்திருந் தனர். இதனையொட்டி, சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் அருள் தலைமையில் ஏராள மான பொதுமக்கள் ரயில்வே கோட்ட அலுவ லகம் முன்பு திரண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்ட பொதுமக்கள், திடீரென அலுவலகத் திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்பின் ரயில்வே கோட்ட மேலாளரி டம் மனு அளித்தனர். அதனை பெற்று கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். அதிகாரிகளின் இந்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p>
