பென்சன் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தர்ணா
9 Jan 2026, 3:41 pm
<p><strong>பணி நிரந்தரம் கேட்டு காத்திருப்புப் போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், ஜன.9- பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்களின் எதிர்கால நலன்கருதி, வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். நகர்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்புடன் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றம் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் வெள்ளியன்று நடைபெற்ற போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முத்துச்செல்வி, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதேபோன்று, ஈரோடு மகளிர் திட்ட அலுவலகம் முன்பு, ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தலைமையில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
