பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி
8 Apr 2026, 5:30 am

பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி

மேட்டுப்பாளையம், ஏப். 7- மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.சண்முகசுந்தரம், பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பதே எனது முதன்மைப் பணி எனத் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பவானி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்கவும், கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவும் பாடுபடுவேன் என அவர் கூறினார்.