தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்!

yesterday
அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்!

அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்!

கிராமப்புறம் சார்ந்த, தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள திரு வண்ணாமலை மாவட்டத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கு இணை யாகக் கல்வியில் தொடர்ந்து போதிய வளர்ச்சி ஏற்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 860 கிராம பஞ்சாயட்டுகளில் நெல், கரும்பு, வாழை, பூ உள்ளிட்ட விவ சாயம், அரிசி ஆலைகள், கைதறி மற்றும் பட்டுச் சேலை உற்பத்தியில் ஈடுபடும் தொழி லாளர் குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தைத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளே நிர்ணயிக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுத் தேர்ச்சி விகிதம் கீழ்நிலையில் இருந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கள ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திரு வண்ணாமலையில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அன்றைய மாநிலச் செய லாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் 90 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் நல்ல கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு சில பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். ஆனால், இன்றும் புதிய ஆசிரி யர்கள் நியமிக்கப்படாமல் பல இடங்களில் பணியிடங்கள் காலி யாகவே உள்ளன.

“எங்கே ஒரு பள்ளி திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்ற பிரெஞ்சு சிந்தனையாளரின் வாக்கிற்கேற்ப, மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளையும் அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய மாகும். அரசுப் பள்ளிகளில் நில வும் ஆசிரியர் பற்றாக்குறை, போதுமான கட்டமைப்பு வசதியின்மை, பராமரிக்கப்படாத ஆய்வகங்கள், தேவைக்கேற்ப இல்லாத கழிவறைகள், இரவு காவலர் இல்லாமை, கட்டிடங்களின்மை மற்றும் போதிய விளையாட்டு மை தானம் இல்லாத நிலை போன்றபல்வேறு கட்டமைப்புகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிஎன 42 பள்ளிகளில் நடத்தப்பட்டஆய்வு முடிவுகள் மிகுந்த கவலைஅளிப்பதாக உள்ளன. மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளிகளில் 10 முதல் 30 மாணவர்கள் மட்டுமே பயிலும் பள்ளிகள் சரிபாதி எண்ணிக்கை யில் உள்ளன.குறிப்பாக, 10 மாண

வர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் தெள்ளார் ஒன்றியத்தில் 15-ம், செய்யாறு ஒன்றியத்தில் 5-ம் என மாவட்டம் முழுவதும் சுமார் 200 பள்ளிகள் வரை உள்ளன. மேலும், தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் தொடக்கப்பள்ளிகள் செய்யாறு ஒன்றி யத்தில் 23-ம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 28-ம் என, மாவட்டத்தின் 19 ஒன்றியங்களில் 40 சதவீத பள்ளிகளில் கடந்த சில ஆண்டு களாகத் தலைமைஆசிரியர் இல்லாத நிலை தொடர்கிறது. இது மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கும், அரசு நடத்தும் பொதுத்தேர்வுத்தேர்ச்சிக்கும் பெரும் தடையாக உள்ளது.

இந்தத் தடைகளைத் தகர்த்து, மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்திட அவசியம் செய்ய வேண்டியவை:

ஆசிரியர் பற்றாக்குறையை போக்குதல்கல்வித் தரத்தின் முதன்மைக் காரணி ஆசிரியர்களே. திரு வண்ணாமலை மாவட்டத்தின் பல தொலைதூர கிராமப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நீண்டகாலமாக உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலமாக நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசிரி யர்களை நியமித்து, ஒரு ஆசிரியரே பல வகுப்புகளைக் கவனிக்கும் அவலத்தை மாற்ற வேண்டும். தற்காலிகத்தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளூர் கல்வி ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதைமுற்றிலும் கைவிட வேண்டும்.

அடிப்படை வசதிகள் அவசியம்மாணவர்களின் பாதுகாப்பான கற்றல் சூழலுக்கு அடிப்படை வசதிகள் மிக அவசியமானவை. குறிப்பாகப் பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க, போதிய எண்ணிக்கையில் கழி வறைகளைக் கட்டியும், தண்ணீர் வசதியுடன் அவற்றை முறையாகப் பராமரிக்கத் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பல அரசுப் பள்ளிகள் சுற்றுச்சுவர் இன்றிச் சமூக விரோதிகளின் தொல்லை மற்றும் கால்நடைகளின் நடமாட்டத்தால் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் உறுதியான சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளி லும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் தடையற்ற மும்முனை மின் இணைப்பு உறுதி செய்யப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்புகளைச் சரிசெய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

அறிவியல் மற்றும் கணினி ஆய்வக வசதிகள்நவீன உலகிற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த செய்முறைக்கல்வி அவசிய மானது. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்கள் நவீன உப கரணங்களுடன் மேம்படுத்தப்பட வேண்டும். நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் முதல் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கணினிப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கிராமப்புறமாணவர்களும் தொழில்நுட்பக் கல்வியைப் பெற முடியும்.

கற்பித்தல் முறையில் மாற்றம்கட்டமைப்போடு சேர்த்து கற்பித்தல் முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியமாகும். அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் சிறப்புத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கும் ஆசிரியர்க ளுக்கும் இடையிலான இடை வெளியைக் குறைக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வதோடு, அறிவியல் மற்றும் பண்பாட்டு ரீதி யான நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.

பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ள பள்ளி மாணவர் தலைவர் தேர்தலை உடனே நடத்த வேண்டும். அதுமாணவர்களிடையே தன்னம்பி க்கையையும் தலைமைப் பண்பை யும் உருவாக்க உதவி புரியும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.