முந்தய பக்கம்

“அரசுப்பள்ளிகளை பாதுகாப்போம்” கையெழுத்து இயக்கம்

1 Nov 2026, 1:31 am
“அரசுப்பள்ளிகளை பாதுகாப்போம்” கையெழுத்து இயக்கம்

“அரசுப்பள்ளிகளை பாதுகாப்போம்” கையெழுத்து இயக்கம்

கோவை, அக்.31-அரசுப் பள்ளிகளை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் கோவையில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முன்பருவக்கல்வி மற்றும் முழுநேர வகுப்புகள் தொடங்க வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள அஞ்சலகம் முன்பு, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட மேற்கு மண்டலம் சார்பில் கையெழுத்து இயக்கம் சனியன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.சந்திரசேகர், இலக்கிய ஆளுமை சு. வேணுகோபால், நாடகவியலாளர் திலீப்குமார், பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலப் பொறுப்பாளர் அருளானந்தம், தமுஎகச மாவட்டத் தலைவர் மு.காளிநாதன், செயலாளர் அ.கரீம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். மாணவர் பெருமன்றத்தினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram