அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்!
16 Aug 2026, 10:04 pm

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்!

சென்னை, ஆக. 16-தேசத்தின் விடுதலைத் திருநாளை முன்னிட்டு “அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆகஸ்ட்15 அன்று மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் கையெழுத்து இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கோரிக்கைகள்

இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாத்திட வேண்டும்; தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைத் தடுத்திட ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவர வேண்டும்; சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்திடதனிச்சட்டம் இயற்றிட வேண்டும் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்

படுத்த வேண்டும்; பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துத் தலித் விடுதலைக்கான தேசிய மேடை (DSMM) சார்பில் இந்தியா முழுவதும் இக்கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிலும் நடைபெற்ற இவ்வியக்கத்தில், பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு, நேரடியாக உரையாடல்கள் நடத்தப்பட்டன. தெருமுனைக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் கிராமசபைக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அரசியலமைப்புச் சட்டம், சமூகநீதி, சமத்துவம், இடஒதுக்கீடு, சாதி ஒழிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுப் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன.

தலைவர்கள் பங்கேற்பு

மாநிலம் முழுவதும் நடைபெற்ற இவ்வியக்கத்திற்குப் பல்வேறு தலைவர்களும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துத் தொடங்கி வைத்தனர். விருதுநகரில் தலித் விடுதலைக்கான தேசிய மேடை அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோரும், சிவகாசியில் மாநிலப் பொருளாளர் கே.முருகனும் பங்கேற்றனர். வடசென்னை பெரம்பூர் எம்.கே.பி நகரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில சிறப்புத் தலைவருமான எஸ்.கே.மகேந்திரன் இயக்கத்தைத் தொடங்கி வைக்க, தென் சென்னையில் வேளச்சேரி–தரமணி பகுதியில் தலித் விடுதலைக்கானதேசிய மேடை அகில இந்திய துணைச் செயலாளர் க.சுவாமிநாதன் பங்கேற்றார்.

இராமநாதபுரத்தில் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணுவும், திண்டுக்கல்லில் நாடாளுமன்ற உறுப்பினர்ஆர்.சச்சிதானந்தம், மாநிலத் துணைத் தலைவர் ஜி.ராணி, சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் பிரபாகரன் ஆகியோரும் இயக்கத்தை முன்னெடுத்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் த.லதா, தமுஎகச மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா ஆகியோரும், தருமபுரி மாவட்டம் அரூரில் மாநிலத் துணைத் தலைவர் பி.டில்லிபாபு , மாநிலத் துணைத் தலைவர் மு.முத்து, சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் தேவராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலியில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோரும், திருவண்ணாமலையில் முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராமதாஸ், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் தலித் நதியாவும் பங்கேற்றனர். கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருவாரூரில் வி.தொ.ச மாநிலச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் செ.முத்துராணி, மயிலாடுதுறையில் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் ஆகியோர் இயக்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்பு ஆற்றினர்.

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே.நேருவும், சிஐடியு மாநிலச்செயலாளர் இ.முத்துக்குமாரும் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் திராவிடத் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் சி.வெண்மணி இயக்கத்தைத் தொடங்கி வைக்க, சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி பங்கேற்றார். மேலும், கடலூர் சிதம்பரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகை.மாலி, பழ.வாஞ்சிநாதன்; வேலூரில் வே.குபேந்திரன்; புதுக்கோட்டையில் மா.சின்னதுரை; சிவகங்கையில் வி.பி.வேல்முருகன், ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் தாரா; தஞ்சாவூரில் களப்பிரன்; ஈரோட்டில் நாகை கரூரில்இரா.முத்துச்செல்வன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.விடுதலைத் திருநாளை வெறும் விழா நிகழ்ச்சிகளுடன் நிறுத்திவிடாமல், மக்கள் மத்தியில் அரசியலமைப்புச் சட்டம், சமூகநீதி மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து அரசியல் உரையாடலை முன்னெடுக்கும் நாளாக இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை சாசனம்

நவம்பர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு நடைபெறும் இப்பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்படும் கையெழுத்துகள், சமத்துவத்திற்கான கோரிக்கை சாசனத்துடன் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சாதி ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கும், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும் இவ்வியக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிதெரிவித்துள்ளது.