புதுச்சேரி மாநிலத்தின் சுயசார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>புதுச்சேரி மாநிலத்தின் சுயசார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</strong></p>
<p>புதுச்சேரி, பிப்.23- மாநிலத்தின் சுயசார்பு பொருளாதாரத்தை மேம் படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு ஒருங்கிணைப்பாளர் வெ.பெருமாள் தலைமை யில், மாநில செயற்குழு உறு ப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், மாநிலக் குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமைச் செயலர் சரத்சௌகானை திங்களன்று (பிப். 23) சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், புதுச் சேரி விடுதலையடைந்து 71 ஆண்டுகள் கடந்தும் உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற அடிப்ப டைத் தேவைகள் முழுமை யாக நிறைவேற்றப் படவில்லை என சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த 10 முக்கிய கோரிக் கைகளை சிபிஐ(எம்) முன்வைத்து, மாநிலத்தின் சுயசார்பு பொருளா தாரத்தை மேம்படுத்த வலி யுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎம் தொடர் போராட் டங்களுக்குப் பின் திறக்கப் பட்ட ரேஷன் கடைகள் மூலம் மாதம்தோறும் இலவச அரிசி, கோதுமை மற்றும் மானிய விலையில் மளிகைப் பொருட்களை வழங்க வேண்டும். ஆதர வற்றோர் மற்றும் பழங்குடி யினருக்குச் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க வேண்டும். குடிநீர் கிராமப்புறங்களில் ஆழ் துளைக் கிணறுகள் மூலம் தொடர்ந்து நீரை உறிஞ்சு வதைத் தடுத்து, ‘ஜல் ஜீவன்’ திட்ட நிதியைக் கொண்டு நீர்நிலைகளைப் பாதுகாத்து மழைநீர் சேக ரிப்பை மேம்படுத்த வேண்டும். வீட்டுமனை மற்றும் வாடகை மானியம் சொந்த வீடில்லாத ஏழை களைக் கணக்கெடுத்து, அவர்களுக்குக் குடியிருப்பு வசதி கிடைக்கும் வரை வீட்டு வாடகை மானியம் வழங்க வேண்டும்.கைய கப்படுத்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்து உடனடி யாகத் தகுதியான பயனா ளிகளுக்கு (குறிப்பாக பாகூர், அரங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில்) பட்டா வழங்க வேண்டும். பாகூரில் சாதியப் பாரபட் சங்களை எதிர்கொள்ளும் பழங்குடி மற்றும் அருந்ததி யர் மக்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி மூடப்பட்ட பஞ்சாலை களை ‘ஜவுளிப் பூங்கா வாக’ மாற்ற வேண்டும். ‘மூடி கிடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி செயல்படுத்துவதோடு, சேத ராப்பட்டு, கரசூர் மற்றும் காரைக்கால் போலகம் பகுதி களில் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களை அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தை எவ்விதச் சுருக்கமும் இன்றி முழுமையாகச் செயல்ப டுத்த வேண்டும். மின் தனியார்மயம் மின் விநியோகத்தைத் தனியார்மயமாக்கும் முடி வைக் கைவிட வேண்டும்.ஏழைகளைப் பாதிக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போலி மருந்து போலி மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் நடந்துள்ள பல நூறு கோடி ஊழல் வழக்கை, உயர் நீதி மன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் கடந்த 15 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் உள்ளாட்சித் தேர்தலை சட்ட மன்றத் தேர்தல் முடிந்த ஒரு மாத காலத்திற்குள் உடனடி யாக நடத்த வேண்டும். தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கைவிட்டு, பஞ்சப்படியுடன் கூடிய குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இளம் தலைமுறையைச் சீரழிக்கும் போதைப் பொருள் விற்பனையா ளர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். 2022-ஆம் ஆண்டு முதல் புதிதாக வழங்கப்பட்ட அனைத்து ரெஸ்ட்டோபார் மற்றும் பப்புகளுக்கான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கை களை அரசு தீவிரமாக பரி சீலித்து, விரைந்து நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
