தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலைகளை சீரமைப்பதாக உறுதியளிப்பு

13 Dec 2025, 5:13 pm
சாலைகளை சீரமைப்பதாக உறுதியளிப்பு
<p><strong>சாலைகளை சீரமைப்பதாக உறுதியளிப்பு</strong></p> <p>ஈரோடு, டிச.13- பயன்பாட்டில் இருக்கும் குண் டும், குழியுமான சாலைகளை விரைந்து சீரமைக்கப்படும் என வட் டாட்சியர் உறுதியளித்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்த காத்தி ருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கூரபாளையம், கதிரம்பட்டி &nbsp;கிராமங்களில் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், பட்டியலின மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பாதைகள் குண்டும், குழியுமாக மாறி யுள்ளன. குறிப்பாக, நசியனூர் &ndash; &nbsp;மேட்டுக்கடை கம்புளியம்பட்டி சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி எருக்கலாங்காடு வழியாக ராயபாளையம், நஞ்சனாபுரம், திண் டல் - பெருந்துறை சாலையை இணைக்கும் சாலை உள்ளது. அதே போல, மணல்மேடு மதுரைவீரன் கோவிலிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் வழியில் கங்கா கார்டன், பாலாஜி கார்டன், துணை மின் நிலை யம், மின்வாரிய உதவி பொறியா ளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளது. இவை மண் சாலையாக வும், குண்டும், குழியாகவும் காட்சிய ளிக்கிறது. மேலும், நஞ்சனாபுரம் ஸ்ரீகார்டன் பகுதியில் விவசாய நிலங் கள் மற்றும் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை கரடு முரடாக மாறியுள்ளது. ராயபாளையத்திலிருந்து மேற்கிலி ருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலை பல நூறு ஏக்கர் விளை நிலங் கள் மற்றும் மயானத்திற்கு செல்லும் இப்பாதை பழுதடைந்து காணப்படு கிறது. இதுகுறித்து பலமுறை முறை யிட்டும், பலனில்லை. இதனால் வட் டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்தது. அதன்படி, திங்களன்று போராட் டம் நடைபெறும் என்ற நிலையில் சனியன்று வட்டாட்சியர் பேச்சுவார்த் தைக்கு அழைப்பு விடுத்தார். அதன் படி சிபிஎம் தாலுகா செயலாளர் என். பாலசுப்பிரமணி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர் என்.ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த் தையில் கலந்து கொண்டனர். அப் போது, ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள சாலைகளை ஒரு வாரத்தில் சீரமைத்துக் கொடுக்கப் படும். நெடுஞ்சாலைத்துறையின் கட் டுப்பாட்டிலுள்ள சாலைகளை சீர மைக்க கோப்புகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. துறையின் அனுமதி கிடைத்ததும் சாலைகள் சீரமைக்கப்படும் என வட்டாட்சியர் வாய்மொழியாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட போராட் டக்குழுவினர் போராட்டம் தற்காலிக மாக கைவிடப்படுதாகக் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.