தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

27 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி

3 Mar 2026, 3:38 pm
27 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி
<p><strong>27 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி</strong></p> <p>ஈரோடு, மார்ச் 3- பவானி அருகே 30 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தலைமையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட் டத்தை தொடர்ந்து, 27 குடும்பங்க ளுக்கும் பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சி, 14 ஆவது வார்டுக்குட் பட்ட காமராஜர் வீதியில் சுமார் 27 குடும்பத்தினர் பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுக ளாக வசித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக வட்டாட்சியர், ஆட் சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து பட்டா கேட்டு மனு &nbsp;அளித்து வந்தனர். ஆனால், இது வரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் வீடு கட்டவும், மின் இணைப்பு பெறவும் இயலாமல் மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். இந் நிலையில், விவசாயத் தொழிலாளர் களான அப்பகுதி மக்கள் அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கத்தின் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு செவ்வாயன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு சங் கத்தின் தாலுகா குழு உறுப்பினர் ஏ.ஜி.குழந்தைசாமி தலைமை ஏற் றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச் சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க &nbsp;தாலுகா செயலாளர் எஸ்.மாணிக் கம், சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர். பிரகாஷ், சிஐடியு பொதுத்தொழிலா ளர் சங்க தாலுகா செயலாளர் ஏ.ஜெக நாதன், வார்டு கவுன்சிலர் கே.விஜய லட்சுமி உட்பட பலர் கலந்து கொண் டனர். காவல் துறை அனுமதி மறுக்கப் பட்டிருந்த நிலையிலும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து துணை வட்டாட்சியர் பழனிவேல், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக &nbsp;அலுவலர் உள்ளிட்டோர் பேச்சு வார்தை மேற்கொண்டனர். அப் போது, வருவாய்த்துறையினரின் போராட்டங்கள் முடிந்தவுடன் முதல் வேலையாக 27 குடும்பங்களுக்கும் பட்டா பெற ஆவண செய்யப் படும் என்று எழுத்துப்பூர்வமாக உறு தியளித்தனர். அதன்பேரில் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.