முந்தய பக்கம்

உடுமலையை முன்மாதிரி நகரமாக்க உறுதி!

11 Apr 2026, 5:30 am
உடுமலையை முன்மாதிரி நகரமாக்க உறுதி!

உடுமலையை முன்மாதிரி நகரமாக்க உறுதி!

உடுமலை, ஏப்.10- உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து, அவற்றுக்கான தீர்வுகளுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் பிரச்சார நடைமுறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உடுமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், பெரியகோட்டை, காமராஜ் நகர், சிவசக்தி காலனி மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கிய அவர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக உடுமலை நகராட்சி உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இதனால் நகராட்சி நிர்வாகம் குறித்தும், வார்டு வாரியாக மக்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நான் முழுமையாக அறிவேன்.

Share
FacebookXWhatsAppTelegram