முந்தய பக்கம்

திட்ட இயக்குநரின் ஊழியர் விரோதப்போக்கு

12 Mar 2026, 4:20 pm
திட்ட இயக்குநரின் ஊழியர் விரோதப்போக்கு
<p><strong>திட்ட இயக்குநரின் ஊழியர் விரோதப்போக்கு&nbsp;ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் முற்றுகை</strong></p> <p>சேலம்,மார்ச் 12- சேலம் மாவட்ட திட்ட இயக்குநரின் ஊழியர் விரோதப் போக்கை கண் டித்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற் றும் பொறியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்ட இணை இயக்கு நர் மற்றும் திட்ட இயக்குநராக செயல் பட்டு வரும் வாணீஸ்வரி, ஊரக வளர்ச் சித்துறையில் பணியாற்றும் ஊழியர் களை, ஆய்வுக்கூட்டம் மற்றும் திட்டப் &nbsp;பணிகள் கள ஆய்வின்போது அருவருக் கத்தக்க வகையில் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், உளவியல் ரீதி யாக பாதிப்பை ஏற்படுத்துவது, குடும்ப &nbsp;சூழ்நிலையை காரணம் காட்டி விமர் சனம் செய்வது, உருவ கேலி, கருணை &nbsp;அடிப்படை பணியை கொச்சைப்படுத்து வது, பாலினம் குறித்து அவதூறு போன்ற ஊழியர் விரோதப்போக்கில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் முறையிட்டும், ஊரக &nbsp;வளர்ச்சித்துறை இயக்குநர் மற்றும் கூடு தல் தலைமைச் செயலாளர் ஆகி யோருக்கு அனைத்து வட்டக் கிளைகளி லிருந்தும் கடிதம் அனுப்பியும் எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை பொறியாளர்கள் சங்கத்தினர் புதனன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன்பின் ஆட்சியரை நேரில் சந்தித்து முறையீட்டு கடிதத்தை வழங்கி, &nbsp;இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் மார்ச் 16 ஆம் &nbsp;தேதி பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட் டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்த னர். முன்னதாக, இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ஜான் ஆண்ஸ்டீன், பொறி யாளர் சங்க மாவட்டத் தலைவர் துரை சாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram