தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிந்து - திராவிட நாகரிகத்தை திரிக்கும் பேரபாயத்தை கண்டித்து முற்போக்கு அமைப்பினர் போராட்டம் - கைது

19 Dec 2025, 6:05 pm
சிந்து - திராவிட நாகரிகத்தை திரிக்கும் பேரபாயத்தை கண்டித்து முற்போக்கு அமைப்பினர் போராட்டம் - கைது
<p><strong>சிந்து - திராவிட நாகரிகத்தை திரிக்கும் பேரபாயத்தை கண்டித்து முற்போக்கு அமைப்பினர் போராட்டம் - கைது</strong></p> <p>கோவை, டிச.19- சிந்து - திராவிட நாகரிகத்தை &ldquo;சரசு வதி நாகரிகம்&rdquo; என திரிப்பதை கண்டித் தும், கொங்குநாடு கல்லூரியில் &nbsp;நடை பெற்ற சரஸ்வதி நாகரீக பன்னாட்டு கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். கோவையில் உள்ள கொங்கு நாடு &nbsp;கல்லூரியில் &nbsp;நடைபெற்ற கருத்தரங்கில் திராவிட நாகரிகத்தை மறுத்து, வேத &nbsp;நாகரிகத்தை புகுத்துவதாக குற்றம் சாட்டி முற்போக்கு இயக்கத்தினர் வெள்ளியன்று முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை டாடா &nbsp;பாத் &nbsp;பகுதியில் தபெதிக பொதுச்செய லாளர் &nbsp;கு.ராமகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திராவிடர் கழக மாநகரச் செயலாளர் &nbsp;சந்திரசேகர், ஆதித்தமிழர் பேரவை &nbsp;மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், தமுஎகச துணை பொதுச்செயலாளர் அ.கரீம், மாவட்டத் தலைவர் காளிநா தன், கலை இலக்கிய பெருமன்ற செய லாளர் பா.ப.ரமணி, தமிழ்புலிகள் இள வேனில் மற்றும் மலரவன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். &nbsp;இதுகுறித்து கு.ராமகிருட்டிணன் கூறுகையில், கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெ றும் சிந்து சரஸ்வதி கருத்தரங்கில் தமி ழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில், திராவிட நாகரி கத்தை மறுத்து, வேத நாகரிகத்தை புகுத்துவதாகவும் இதன் மூலம் வர லாற்றை திருத்தி மாணவர்களுக்கு சொல்வது மட்டுமல்லாமல், இச்செயல் கல்லூரியில் கல்வியை காவி மயமாக்கு வதாகவும் உள்ளது. மேலும் &nbsp;இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தெரியபடுத்தி யுள்ளோம். &nbsp;அவர் இது போன்ற கொள் கைக்கு எதிரானவர் என்பதால் கல்லூரி &nbsp;மீது &nbsp;நடவடிக்கை எடுப்பார், என்றார். &nbsp;தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீ சார் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.