மும்மொழிக் கொள்கையா? இந்தித் திணிப்பா?
13 Apr 2026, 5:30 am

மும்மொழிக் கொள்கையா? இந்தித் திணிப்பா?

“தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த அதிமுக-விடம் பாஜக வலியுறுத்தும்” எனப் பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார். முதலில் அதிமுக ஆட்சிக்கு வரும் என்ற இவரது கனவே பலிக்கப்போவதில்லை. அப்படியே வந்தாலும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்க முயல்வதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டின் ரத்தத்தில் ஊறிய வரலாறு. 1960-களில் நடந்த மொழிப்போர் இன்றும் மக்களின் மனதில் பசுமையாக உள்ளது. மொழியைச் சிதைப்பது என்பது பாசிசத்தை நோக்கிய ஒரு நகர்வாகும். பாஜகவின் சேவகர்களாக மாறியவர்கள் இன்று இந்தியை ஆதரிப்பார்கள், நாளை சமஸ்கிருதத்தை வழிமொழிவார்கள். இவர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.