தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

19 Feb 2026, 3:09 pm
எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
<p><strong>எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்</strong></p> <p>திருப்பூர், பிப்.19 - எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை பிப்.23 ஆம் தேதி &nbsp;நடைபெற உள்ளது. திருப்பூர் எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான &nbsp;பேச்சுவார்த்தை திருப்பூர் &nbsp;அனுப்பர்பாளையத்தில் உள்ள எவர் சில்வர் முழுக்கூலி பட்டறைதாரர் சங்க &nbsp;அலுவலகத்தில் வியாழனன்று &nbsp;நடை பெற்றது. அனைத்து தொழிற்சங்கங்க ளின் கூட்டுக்கமிட்டி முன்னிலையில் நடை பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சிஐ டியு சார்பில் குப்புசாமி, குபேந்திரன், எல்பிஎப் சார்பில் வேலுச்சாமி, கஜேந்தி ரன், &nbsp;ஏடிபி சார்பில் &nbsp;குணசேகரன், விஜய குமார், எஐடியுசி சார்பில் நாகராஜன், எச்எம்எஸ் சார்பில் பாண்டியராஜன், காமாட்சி அம்மன் சங்கம் சார்பில் அர் ஜுனன், ஆறுச்சாமி, ஐஎன்டியுசி சார் பில் பூபதி, அசோக்குமார், பிஎம்எஸ் &nbsp;சார்பில் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். &nbsp;மேலும், எவர் சில்வர் முழுக் கூலி பட்டறைதாரர்கள் சங்கத் தலைவர் துரைசாமி, செயலா ளர் தர்மமூர்த்தி, பொருளாளர் கஜேந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் இதர &nbsp;சலுகைகள் குறித்து விரிவாக விவாதிக் கப்பட்டது. இக்கூட்டத்தில் இரு தரப்பி லும் சுமூகமான உடன்பாடு எட்டப்படும் &nbsp;வகையில் முக்கிய முடிவுகள் ஆலோ சிக்கப்பட்டன. பேச்சுவார்த்தையின் முடிவில், ஊதிய உயர்வு கோரிக்கை யில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் &nbsp;தெரிவித்தனர். அடுத்த கட்ட பேச்சு வார்த்தை வரும் பிப்.23ஆம் தேதி நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவர்சில்வர் பாத்திர உற்பத்தியில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள &nbsp;ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் முடித்து தங்களுக்கு உரிய கூலி &nbsp;உயர்வு கிடைக்கும் என எதிர்பார்கின்ற னர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.