தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முஸ்லிம் மாணவரை ‘பயங்கரவாதி’ என அழைத்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

29 Mar 2026, 3:34 pm
முஸ்லிம் மாணவரை ‘பயங்கரவாதி’ என அழைத்த பேராசிரியர் பணியிடை நீக்கம்
<p><strong>முஸ்லிம் மாணவரை &lsquo;பயங்கரவாதி&rsquo; என அழைத்த பேராசிரியர் பணியிடை நீக்கம்</strong></p> <p>பெங்களூரு கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகமான, பிஇஎஸ் (PES) &nbsp;பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முரளிதர் தேஷ்பாண்டே என்பவர் மார்ச் 24 அன்று வகுப்பறையில் பாடம் &nbsp;எடுத்துக் கொண்டிருந்த போது முஸ் லிம் மாணவரை &lsquo;பயங்கரவாதி&rsquo; என அழைத்து அடாவடியில் ஈடுபட்டார். &nbsp;முஸ்லிம் மாணவரை நோக்கி &nbsp;முரளிதர் தேஷ்பாண்டே,&rdquo;வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது நீ &nbsp;தொந்தரவு செய்கிறாய். இன்று இங்கே &nbsp;அமைதியாக இருக்கும் என்று நினைத்தேன். உனக்கு வெட்கமாக இல்லையா? உருப்படாதவனே, பயங் &nbsp;கரவாதி! உன்னை நான் பயங்கரவாதி என்றுதான் அழைப்பேன்&rdquo; என 13 முறை பயங்கரவாதி, பயங்கரவாதி என வகுப்பறையில் கத்தி கூப்பாடு போட்டார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, துணை வேந்தர் கையெழுத்திட்ட உத்தர வின்படி பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டே &nbsp;பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியகியுள்ளன. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப் &nbsp;பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படை யில் இறுதி ஒழுங்கு நடவடிக்கை எடுக் &nbsp;கப்படும் என்று பிஇஎஸ் பல்கலைக் கழக நிர்வாகம் &nbsp;அறிவித்துள்ளது. மாணவர்கள் போராட்டம் முஸ்லிம் மாணவரை &lsquo;பயங்கர வாதி&rsquo; என அழைத்த பேராசிரியர் பகி ரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ; அவரை பணியில் இருந்து நீக்க &nbsp;வேண்டும் என இடதுசாரி மாணவ அமைப்புகள், எஸ்எஸ்யுஐ சார்பில் &nbsp;காவல்துறையில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. அதே போல கர்நாடகாவின் பெரும்பாலான இடங்களில் மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.