தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல்! தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

29 Oct 2026, 10:40 pm
பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல்! தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல்! தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, அக். 29 -பேராசிரியர் கலையரசனுக்கு காவல்துறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காவல்துறையினரின் அராஜக நடவடிக்கை

இந்தியாவின் புகழ்மிக்க நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் அமைந்துள்ள ‘சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS)’ பேராசிரியராக பணியாற்றிவரும் ஏ. கலையரசன், புதன்கிழமையன்று அதிகாலை 5 மணிக்கு சீருடை இல்லாத காவல்துறையினரால்நிர்ப்பந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவரது செல்போன் பறிக்கப்பட்டு உடை மாற்றக் கூடஅனுமதிக்காமல் வாடகை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். சில மணிநேர அலைக்கழிப்பிற்கு பிறகு மீண்டும் வீட்டில் இறக்கி விடப்பட்டிருக்கிறார். காவல்துறையின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்துஅவதூறாக பதிவிடப்பட்டிருந்த தாகவும் அதில் அவரது புகைப்படம் இருந்ததாகவும் அதனால்விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக பேராசிரியர் கலையரசன், காவல்துறை டிஜிபிக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட அச்சுறுத்தும் முயற்சியாகவே தெரிகிறது!

கலையரசன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களோடு தொடர்புடையவர். இந்தியாவின் திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். தமிழ்நாடுதிட்டக்குழுவின் சில உபகுழுக்களிலும் பணியாற்றியிருக்கிறார். பொருளாதார நிபுணர். அப்படிப்பட்ட ஒருவரை கைது செய்த முறை, காரணம், கைது செய்த நேரம், காவல்துறை நடந்து கொண்ட விதம் இவையனை த்தும் குறிப்பிட்ட இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு பதிவை முன்வைத்து அச்சுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு செய்யப்பட்டதாகவே தெரிகிறது.

தனக்கு இன்ஸ்டாகிராம் ஐடி எதுவும் இல்லை என்றும் தனது புகைப்படத்தை யாரோ தவறாகபயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக் கிறார். ஆயினும், காவல்துறை இவற்றுக்கெல்லாம் செவி சாய்க்கவில்லை என்பது ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவரைஅச்சுறுத்த வேண்டுமென்ப தற்காகவே காவல்துறை இப்படி நடந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

காவல்துறை பதில் சொல்லியாக வேண்டும்!

எனவே, தமிழ்நாடு அரசு அந்த குறிப்பிட்ட வலைத்தள கணக்கை தொடங்கியவர் யார்? பதிவிட்டது யார்? புகார் அளித்தது யார்? காவல்துறையினர் உரிய விசாரணையையும், வழிமுறைகளை யும் பின்பற்றாமல் துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டது ஏன்? அவர்களுக்கு இந்த உத்தரவை அளித்தது யார்? என்பது குறித்து உரிய முறையில் விசாரித்து தவறிழைத்த அனைவர் மீதும் காவல்துறை வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.