சமூக பிரச்சனைகள் பற்றிய கேள்வி பேராசிரியர் பணியிடை நீக்கம்
24 Dec 2025, 3:39 pm
<p><strong>சமூக பிரச்சனைகள் பற்றிய கேள்வி பேராசிரியர் பணியிடை நீக்கம்</strong></p>
<p>புதுதில்லி தில்லி ஜாமியா மிலியா இஸ்லா மியா பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாளில் இந்தியாவில் உள்ள சமூக பிரச்சனை சார்ந்து கேள்வி கேட்டதால் அத்துறையின் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வு நடை பெறுகிறது. இதில் சமூகப் பணித் துறை யைச் சேர்ந்த பி.ஏ. (சமூகப் பணி) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் “இந்தியாவில் சமூகப் பிரச்சனைகள்” என்ற தேர்வுத்தாளை சமூகப் பணித் துறை பேராசிரியர் வீரே ந்திர பாலாஜி ஷாஹாரே என்பவர் தயாரித்திருந்தார்.அந்த வினாத்தா ளில் “இந்தியாவில் முஸ்லிம் சிறு பான்மையினருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தகுந்த உதார ணங்களுடன் விளக்குக” என கேள்வி இடம் பெற்றிருந்தது. இந்த கேள்வி தொடர்பாக பல்க லைக்கழக நிர்வாகத்திற்கு இந்துத்து வா கும்பல்கள் தரப்பில் இருந்து பல புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் அந்தப் பேராசிரியரை உடனடியாகப் பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தேர்வுத்தாளில் நியாயமான கேள்வி கேட்ட பேராசிரியர், அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதாகப் பல்கலைக்கழக அதிகாரி பொறுப்பற்ற பதிலை தெரிவித்துள்ளதாகக் கூறப் படுகிறது. இந்த விவகாரம் குறித்து முழு மையாக விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் விதி களின்படி இது குறித்து காவல் துறை யில் புகார் அளிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. பணியிடை நீக்க காலத்தில் பேராசிரி யர் ஷாஹாரே தில்லியிலேயே இருக்க வேண்டும் என்றும், உரிய அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
