தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

9 Jan 2026, 3:41 pm
பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
<p><strong>பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை</strong></p> <p>சென்னை, ஜன.9 - பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது, இது தொடர்பான மனுக்களை பால் வளத்துறை ஆணையர் மற்றும் செய லாளர் ஆகியோரிடத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.சி. வெண்மணி சந்தி ரன், பொதுச் செயலாளர் பி.பெருமாள், &nbsp;பொருளாளர் எஸ்.ரவி ஆகியோர் வழங்கினர். அந்த மனுவில், பாலுக்கான கொள் முதல் விலையை கடந்த 2022 ஆம் &nbsp;ஆண்டு அறிவித்து 3 ஆண்டுகள் முடிந் துள்ளது. கறவை மாடுகளுக்கான தீவனம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இத னால் பால் உற்பத்தியாளர்கள் கட்டுப் படியாகாத நிலையில் உள்ளனர். எனவே பால் உற்பத்தியாளர்கள், நுகர் வோர் மற்றும் ஆவின் நிறுவன வளர்ச்சி &nbsp;ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி &nbsp;45 ரூபாய்க்கும், எருமைப்பால் 60 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். ஊக்கத்தொகையை லிட்ட ருக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பணியாற்றும் பணி யாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். &nbsp;இதற்கான தொகையில் 50 சதவீதத்தை ஆவின் ஒன்றியங்கள் மூலம் வழங்க வேண்டும். பாலின் தரத்தை கணக்கிட 8.2 எஸ்என்எப் (கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள்), 4.3எப் (கொழுப்பு சத்து) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கொள்முதல் செய்யப்படும் பாலில் 90 சதவீதம் அளவிற்கு இந்த அளவு சாத்தியமற்றதாக உள்ளது. எனவே, இந்த தர அளவினை மாற்றி &nbsp;8.0 எஸ்என்எப், 4.0 எப் என்ற அளவில் கொள்முதல் செய்ய வேண்டும். பாலை கொள்முதல் செய்வதற்கு எம்ஆர்எப் பார்முலாவும், விற்பனைக்கு &nbsp;ஐஎஸ்ஐ பார்முலாவும் பயன்படுத்தப் படுகிறது. இதனால் கொள்முதல் செய்யப் படும் பாலில் 0.36 புள்ளிகள் எஸ்என்எப் குறைத்தே கணக்கிடப்படுகிறது. இத னால் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 4 ரூபாய் வரை இழப்பு &nbsp;ஏற்படுகிறது. எனவே, இதர மாநிலங் களைப் போன்று ஐஎஸ்ஐ பார்முலா முறை யில் கொள்முதல் செய்ய வேண்டும். பல மட்டங்களில் நடைபெறும் பால் &nbsp;திருட்டை தடுக்க, மதுரை உயர்நீதிமன்ற &nbsp;கிளை தீர்ப்பின்படி பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே அதன் தரத் தையும், அளவையும் கணக்கிட வேண் டும். வேளாண் விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை அறிவிப்பதை போல் ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கு &nbsp;கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 கோ ரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளன. இந்நிகழ்வின் போது மாநில துணைத் &nbsp;தலைவர்கள் ஏ.எம்.முனுசாமி, எம்.சிவாஜி, செல்லதுரை, உதவிச் செயலா ளர்கள் கே.அன்பு, என்.ஜோதி, சி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.