தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயத்தில் குவிந்து கிடக்கும் பிரச்சனைகள்: 3 மாதமாக நடத்தப்படாத விவசாயிகள் குறைதீர் கூட்டம்

5 Dec 2025, 4:21 pm
விவசாயத்தில் குவிந்து கிடக்கும் பிரச்சனைகள்: 3 மாதமாக நடத்தப்படாத விவசாயிகள் குறைதீர் கூட்டம்
<p><strong>விவசாயத்தில் குவிந்து கிடக்கும் பிரச்சனைகள்: 3 மாதமாக நடத்தப்படாத விவசாயிகள் குறைதீர் கூட்டம்</strong></p> <p>திருப்பூர், டிச.5 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மூன்று மாதங்களாக விவசா யிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாத தால், விவசாயிகளின் பல்வேறு கோரிக் கைகள் மற்றும் பிரச்சினைகள் தீர்க்கப்ப டாமல் உள்ளன. எனவே, உடனடியாக &nbsp;விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த &nbsp;வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க் கின்றனர். தமிழ்நாட்டில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப் படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்தக் குறைதீர் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு போன்ற பல்வேறு துறை &nbsp;அலுவலர்களும் கலந்து கொள்வார் கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்து விவசாயிகள், விவசாய &nbsp;சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சி யர் முன்னிலையில் தெரிவிப்பார்கள். அரசு அலுவலர்கள் அதற்கு உரிய பதில் &nbsp;அளிப்பார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட &nbsp;ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர், &nbsp;அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று &nbsp;மாதங்களும், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, முன்னாள் சபாநாயகர் முனுஆதி தலைமையில் குழு அமைக் கப்பட்டது. அந்தக் குழு தமிழ்நாடு &nbsp;முழுவதும் ஆய்வு மேற்கொண்டது. அந் தக் குழுவின் பரிந்துரைப்படி மாவட்டந் தோறும் ஒவ்வொரு மாதமும் 3 ஆம் &nbsp;வெள்ளிக்கிழமை உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்த வேண்டும். அதற்கு விவசாயிகள் உற் பத்தி மற்றும் முறையீட்டுக் குழுக்கூட் டம் எனப் பெயரிடப்பட்டது. அதில், விவ சாயிகளின் உற்பத்தியைப் பெருக்க வும், குறைகளை தீர்ப்பதற்கும் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களில் &nbsp;இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், திருப்பூரில் கடந்த &nbsp;மூன்று மாதங்களாக விவசாயிகள் &nbsp;குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட வில்லை. மேலும், இதைச் சார்ந்து திருப் பூர் சார் ஆட்சியர் அலுவலகம், தாராபு ரம் ஆகிய இடங்களிலும் மாதாந்திரக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. குறிப் பாக விவசாயம் சார்ந்த பகுதியாக &nbsp;உள்ள உடுமலையில் 4 மாதங்களாக &nbsp;கூட்டம் நடைபெறவில்லை. இதனால், &nbsp;சாதாரண பிரச்சினைகள் கூட தீர்க்கப் படாமல் உள்ளன. பல இடங்களில் நில அளவீடு செய்வதற்கு ரூ.3,000 க்கும் &nbsp;மேல் வசூலித்தும், நிலம் அளவீடு செய் யப்படாமல் உள்ளன. ஆன்லைன் விண் ணப்பம் வரிசைப்படி தான் வரும் எனக் &nbsp;கூறி, பணம் கொடுக்காத விவசாயிகள் &nbsp;அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படு கின்றனர். அலுவலர்கள் பணத்தை எதிர் பார்த்து நிலத்தை உட்பிரிவு கூட செய் யாமல் உள்ளனர். வேளாண்மை சார்ந்த &nbsp;அறிவிப்புகள் குறித்து விவசாயிக ளுக்குத் தெரியாமல் உள்ளன. வங்கி கள், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறு வதில் சிக்கல் இருந்தால், இந்தக் கூட் டங்களில் தீர்வு காணப்படும். கூட்டம் &nbsp;நடைபெறாததால் இதிலும் பிரச்சனை உள்ளது. பருவகாலம் என்பதால், மாவட்டத் தின் அனைத்துப் பகுதிகளிலும் காய்க றிகள், மக்காச் சோளம், கரும்பு உள் ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பெரும் &nbsp;பகுதியான நிலத்தில் பயிரிடப்பட்டுள் ளன. இந்நிலையில், பூச்சித் தாக்குதல் &nbsp;உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தற் காத்துக் கொள்வதற்கான ஆலோசனை களும் வழங்கப்படாமல் உள்ளது. &nbsp;தென்னைகளும் நோய்த் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ளன.இப்படி எண் ணற்ற பிரச்சனைகளால் விவசாயிகள் &nbsp;கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். &nbsp;எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியா கக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என்றார். இதுகுறித்து மாவட்ட வேளாண் &nbsp;இணை இயக்குநரிடம் கேட்டபோது, &nbsp; டிசம்பர் 26 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட் சியர் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், அனைத்து வேளாண்மை விரி வாக்க மையங்களிலும் பயிர்களுக் கான விதைகள், உயிர் உரங்கள், நுண் ணூட்ட உரங்கள் இருப்பு உள்ளன. விவ சாயிகள் வேளாண்மை விரிவாக்க &nbsp;மையங்களை தொடர்பு கொண்டு &nbsp;பயன்பெறுமாறு கேட்டுகொண்டார். விவசாயிகளுக்கு ஏராளமான பிரச் சனைகள் உள்ளன. மாதாந்திரக் கூட்டங் களில் முறையிடக்கூடிய அனைத்து &nbsp;பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைப்ப தில்லை. எனினும் நேரடியாக மாவட்ட &nbsp;ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் புகார் தெரிவிப்பதால் தொடர்புடைய துறை அதிகாரிகள் குறைந்தபட்சம் நட வடிக்கை எடுப்பார்கள்.மூன்று மாதங் களாக கூட்டம் நடத்தப்படாததால் சாதா ரணமாக தீர்வு காணக்கூடிய பிரச்சனை கள் கூட கண்டுகொள்ளப்படாத நிலை உள்ளது. மேலும் மாநில அளவில் தீர்மா னித்து நடத்தக்கூடிய இதுபோன்ற கூட் டத்தை தன்னிச்சையாக நடத்தாமல் &nbsp;விடுவது சரியல்ல. இது குறித்து மாவட்ட &nbsp;நிர்வாகம் விவசாயிகளுக்கு உரிய &nbsp;விளக்கம் அளிக்க வேண்டும். இனி வரும் காலத்தில் தொடர்ந்து கூட்டம் நடத்தப்படாவிட்டால் போராட்டத்தில் &nbsp;ஈடுபடும் நிலை ஏற்படும் என்று விவசாயி கள் கூறுகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.