ரிஷிவந்தியம் பள்ளியில் மாணவர்களுக்குப் பரிசளிப்பு
12 Dec 2025, 3:12 pm
<p>கள்ளக்குறிச்சி, டிச. 12- கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னமணியந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசளிப்பு விழா நேற்று (டிச. 11) நடைபெற்றது. பாரதியார் பிறந்தநாள் விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்குப் பாரதியார் கவிதை, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் சிலர் பாரதியார் முகமூடி அணிந்து போட்டியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். போட்டிகளில் வென்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளும் இனிப்பும் வழங்கப்பட்டன. இந்த விழாவை, பள்ளி தலைமை ஆசிரியர் பா. ஷேக்ஜாகிர் உசேன், உதவி ஆசிரியை மு. சுப்புலட்சுமி மற்றும் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் இராஜேஸ்வரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.</p>
