ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
28 Feb 2026, 2:29 pm
<p><strong>ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா</strong></p>
<p>உடுமலை, பிப்.28- தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சனியன்று மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து திருப்பூர் 22 ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங் கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், வழி நடத்திய ஆசிரி யர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றி னார். மடத்துக்குளம் அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் கள் இளையவன் சிவா, நா.இராமமூர்த்தி மற்றும் பிருந்தா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர். முடிவில், மடத்துக்குளம் பொறுப்பாளர் குணசேகரன் நன்றி கூறினார்.</p>
