முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

23 Jul 2026, 9:04 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபடுவது நமது ஜனநாயக வரலாற்றில் இதுவே முதன்முறை. பிரதமர் மோடி பலவீனமானவர், தயக்கமுள்ளவர். அதனால்தான் மோடி அரசால் ஒரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்த முடியவில்லை.

திரைக்கலைஞர் புனித் பனியா

பிரதமர் மோடி கடினமான சிகை அலங்காரம், 5 கேமராமேன்களுடன் ஷூட்டிங் வீடியோ எடுத்து வெளியிட்டால்தான் அவர் ஹீரோ போன்று ஜொலிக்க முடியும். ஆனால் மாணவர்கள் செருப்பு இல்லாமல் தெருக்களில் போராடினால், அவர்கள் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பார்கள். இதுதான் மாணவர்களின் சக்தி. அவர்களை கவனமாக கையாள்வது அரசின் பொறுப்பு.

திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்

என் நாட்டின் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காகப் போராடுகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தைப் போன்ற ஒரு இயக்கம் மீண்டும் உருவாகி வருகிறது. இந்த மாற்றத்தை நான் தொடர்ந்து வலுப்படுத்துவேன். அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்வேன். அவர்களுக்கு எனது பலத்தைக் கொடுத்து, அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் தொடர்ந்து நிற்பேன்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

வினாத்தாள் கசிந்தால் விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரிப்பது இருக்கட்டும். முதலில் வினாத்தாள் கசியாமல் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பிரதமர் மோடி சொல்லவில்லை. பிரச்சனை வந்தால் யார் வேண்டுமானாலும் சமாளிக்கலாம். ஆனால் பிரச்சனையை தடுக்க என்ன வழி உள்ளது?

Share
FacebookXWhatsAppTelegram