தீக்கதிர் முக்கிய செய்திகள்
24 Sept 2026, 9:16 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வது, 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் நாட்டிற்கு எதிரான குற்றச் செயல்களாகும். ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நமது ஜனநாயக நடைமுறையைச் சிதைக்க முயலும் எவரும் இந்த நாட்டுக்கு தீங்கு இழைக்கிறார்கள் என்றே அர்த்தம்.

விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சாஹ்னி

காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள். நாட்டின் அரசியலமைப்போடு விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்; இது நல்லதல்ல. மோடி - அமித் ஷாவை விட மக்களின் சக்தி பெரியது.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி

ஒரு காலத்தில் இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாகத் தேர்தல் ஆணையம் விளங்கியது. ஆனால், தற்போது அது தொடர்ச்சியான வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சி மோடி அரசின் வீழ்ச்சிக்கும் முதல் படியாகும்.

நாகா மாணவர்கள் முன்னணி

கொலை செய்பவனை விடக் கொலை செய்யக் கூலிப்படையை ஏவியவன்தான் முதல் குற்றவாளி. அதேபோல, வாக்குகளை நீக்கத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு உத்தரவிட்டது யார்? அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசின் முடிவு தொடங்கிவிட்டது. மணிப்பூர் விரைவில் அமைதிப் பூங்காவாக மாறும்.