தனியார்மயத்தால் பொது சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைப்பு டெங்கு காய்ச்சல் பரவலுக்கு முக்கிய காரணம்! - வே.தூயவன்
20 minutes before

தனியார்மயத்தால் பொது சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைப்பு டெங்கு காய்ச்சல் பரவலுக்கு முக்கிய காரணம்! - வே.தூயவன்

திருப்பூர், நவ.25 –தமிழக அரசின் தனியார்மயக் கொள்கை காரணமாக பொது சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைக்கப்படுவது திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவலுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது தெரியவருகிறது.

திருப்பூர் மாநகரில் கடந்த சில வாரங்களாக அதிகளவில் பரவி வந்த டெங்கு காய்ச்சல் தற்போது சற்றுக் குறைந்துவருவதாக மாநகர் நல அலுவலர் டாக்டர் மோகன் தெரிவித்தார். எனினும் எவ்வளவு பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தனர்,தற்போது எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற எண்ணிக்கை விபரத்தை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றிய விபரத்தைக் கேட்டபோது, கடந்த நான்கு வார காலத்தை ஒப்பிடும்போதுதற்போது குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 7 பேர் வரை டெங்கு காய்ச்சலில்பாதிக்கப்பட்டனர். தற்போது தினமும் ஓரிருவர் என்ற அளவில்தான் டெங்கு பாதிப்பு உள்ளது என்றார்.துல்லியமான எண்ணிக்கையைக் கூறவில்லை. அதேசமயம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு உயிரிழப்பு ஏதுமில்லை என்றார்.

டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமான ஏடிஎஸ் கொசுப்புழு உற்பத்தி யைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழைக் காலம் என்பதால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த குடியிருப்பு பகுதிகளில் புகை மருந்து அடிப்பது, மாஸ் கிளீனிங், பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் மருத்துவ முகாம், நிலவேம்புகசாயம் கொடுப்பது ஆகியபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

சாக்கடை சுத்தம் செய்ய ஏற்பாடு இல்லை

குப்பை அகற்ற தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டது. அதேசமயம் கழிவுநீர் வடிகால் களைத் சுத்தப்படுத்துவதற்கு தனி ஏற்பாடு இல்லை. நீண்ட காலம் சுத்தப்படுத்தாமல் இருக்கும் சாக்கடை வடிகால்களை துப்புரவுப்பணியாளர்களைக் கொண்டு தூய்மைப்படுத்துவது சிரமம். இதற்காக சிறப்பு ஏற்பாடாக124 பேர் வரவழைக்கப்பட்டு மாநகரில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. திருவண்ணாமலை ஆட்கள்தான் வருகிறார்கள். மாநகரம் முழுவதும் பயன்படுத்தபோதுமான ஆட்கள் இல்லாததால், பாதிப்புள்ள பகுதிகளில் அவர்களைப் பயன்படுத்தி தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும் மருத்துவர் மோகன் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பல்லடம், தாராபுரம் வட்டாரங்களில் தலா ஒருவர் என இரண்டுபேர் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்துள்ளனர்.

மறுக்கப்படும் உண்மை நிலவரம்

டெங்கு பாதிப்பு பற்றி கோவை தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் கூறுகையில், சூலூர் பகுதியில், தான் பணியாற்றும் மருத்துவமனையில் தற்போது தினமும் சராசரியாக ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. டெங்கு காய்ச்சல் கண்டறியும் எலிசாடெஸ்ட்டிற்கு ரூ. 1200 கட்டணம் ஆகும். ரேபிட்டெஸ்ட்டுக்கு ரூ.600 ஆகும். எனினும் டெங்குபாதிப்பை உறுதி செய்து பொது சுகாதாரத் துறை நிர்வாகத்திடம் தெரி்வித்தாலும் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அதை தவிர்க்கப் பார்ப்பார்கள். எலிசா டெஸ்ட்டைத் தான் அரசு நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். டெங்கு காய்ச்சல் பாதிப்புஅதிகம் இருப்பது உண்மைதான். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது தற்போது டெங்கு காய்ச்சலின்தீவிரத்தன்மை சற்றுக் குறைந்துள்ளது. உயிரிழப்பு பற்றிய விபரம் இல்லை என்றார்.அதேசமயம் டெங்கு உயிரிழப்பு பற்றி அரசு வெளிப்படையான, உண்மையான புள்ளி விபரங்கள் தருவதில்லை. கடந்த ஆண்டு நான் பணியாற்றிய வேறொரு பிரபலமான மருத்துவமனையில் மட்டும்டெங்கு காய்ச்சலால் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆனால் அப்போது கோவை மாவட்டம் முழுவதும் 2 பேர் மட்டும்உயிரிழந்தனர் என்று அரசு நிர்வாகம் தெரிவித்தது என்றும் அந்த குழந்தைகள் நல மருத்துவர் கூறினார்.மேலும் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடுமையாக இருக்கும் நோயாளிகளுக்கு கோவை, சென்னைநகரங்களில் கூட பிரபல தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்கவில்லை என்றும் அவர்தெரிவித்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மட்டும் கடந்த வாரம் ஒரே நாளில் 200 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர் என்று அங்குள்ள பொது மருத்துவப் பிரிவு மருத்துவர்ஒருவர் மூலம் தெரியவந்தது. மாநில பொது சுகாதாரத் துறை தகவலின்படி, கடந்த 22ஆம் தேதி வரை மாநிலம்முழுதும் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர், தற்போது பாதிப்புகுறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

தொடர் பாதிப்புள்ள மாவட்டங்கள்

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட ங்கள் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள, தொடர்ந்து பாதிக்கப்படும் வட்டாரங்களாக அரசு மருத்து வத் துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும்இந்த மூன்று மாநகரங்களிலும், சுற்று வட்டார நகர்ப்புற பகுதிகளிலும் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுஒழிப்புக்கும், இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கும் அரசிடமோ, பொது சுகாதாரத் துறையிடமோநீண்ட காலத் தொலை நோக்குத் திட்டம் ஏதும் இல்லை. மாறாக மாநிலத்தில் இருக்கும் பொது சுகாதாரக்கட்டமைப்பை பலவீனப்படுத்தக் கூடிய முறையில், அதில் பணியாற்றும் நிரந்தர மருத்துவர்கள், செவிலியர்கள்,மருத்துவப் பணியாளர்களுக்கு பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றனர். காலிப் பணியிடங்கள்உள்ளன. டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்கு என்று சிறப்புத் திட்டம் ஏதும் இல்லை. இத்துடன் நகர்ப்புறஉள்ளாட்சிகளில், குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளிலும் சுகாதாரப் பணி தனியார்ஒப்பந்தத்திற்கு விடப்படுகிறது.

சீர்குலைக்கப்படும் கட்டமைப்பு

இங்கு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை. இதனால் கொசுப்புழு உற்பத்தியாகும் சாக்கடைக் கால்வாய்கள் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தூர்வாரி தூய்மைப்படுத்தப்படாமல் உள்ளன. அரசின் இத்தகைய தனியார்மயக் கொள்கை முடிவினால் டெங்கு பரவலைத் தடுப்பது தோல்வி அடைகிறது.

பொது சுகாதாரக் கட்டமைப்பைச் சீர்குலைப்பது பல்வேறு தொற்று நோய்கள், பருவ கால நோய்கள் தொடர்ந்து மக்களைத் தாக்குவதற்கும், உயிரிழப்புகளை ஏற்படுத்தவும் காரணமாக உள்ளன. எனினும் உண்மை யை வெளிப்படுத்தாமல் குடியிருப்புகளில் தண்ணீரை சேமிக்கக் கூடாது, பழைய டயர், தேங்காய் தொட்டி ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பிரச்சாரம் செய்வதுடன் முடித்துக் கொள்கின்றனர்.புள்ளிவிபரங்களை மறைப்பதை விட, மக்கள் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு உரிய கட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களும், சமூக நல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.- வே.தூயவன்