நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு
13 Nov 2025, 3:30 pm
<p>நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் மா.கிருஷ்ணன், தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் இளங்கோவன், பொருளாளர் கணேஷ் குமார், அரசு ஊழியர் சங்க செயலாளர் ஏ.தெய்வானை, தணிக்கையாளர் யாரப்பாஷா, ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
