தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா வாபஸ்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா வாபஸ்</strong></p>
<p>சென்னை, பிப்.20 - தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. மசோதாவின் பின்னணி தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவ னங்களின் தேவையை முன்னிட்டு, தனியார் பல்கலைக்கழகங்களை எளி தாக நிறுவும் வகையில் 2023 ஆம் ஆண்டு தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் பட்டது. உயர்கல்வித் துறை அமைச் சர் கோவி. செழியன் இந்த மசோ தாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழகம் நிறுவ 100 ஏக்கர் தேவை என்ற நிபந்தனையை தளர்த்தி, நகர்ப்புற பகுதிகளில் 25 முதல் 50 ஏக்கர் போதும் என்று இந்த மசோதா முன்மொழிந்தது. மேலும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றவும், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து புதிய நிறுவனங்களை தொடங்கவும் இம்மசோதா வழிவகுத்தது. கடும் எதிர்ப்பு கிளம்பியது சிபிஎம், சிபிஐ உட்பட அனைத்துக் கட்சிகளும் இம்மசோதாவை கடு மையாக எதிர்த்தன. அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார்மய மானால் இட ஒதுக்கீடு பாதிக்கப்ப டும் என்றும், கல்விக் கட்டணம் கட்டுக்கடங்காமல் உயரும் என்றும், ஏழை மாணவர்களுக்கான வாய்ப்பு கள் முற்றிலும் மறுக்கப்படும் என்றும் கல்வியாளர்களும் அரசியல் கட்சி களும் வலுவாக வாதிட்டனர். உள்கட்டமைப்பு போதுமான அளவில் இல்லாத நிறுவனங்கள் கூட பல்கலைக்கழகமாக மாறிவிடும் ஆபத்தும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஆசிரியர்களின் பணிப்பாது காப்பும் ஓய்வூதிய உரிமையும் பறிபோ கும் என்ற அச்சமும் தீவிரமாக எழுந் தது. திரும்பப் பெறப்பட்ட மசோதா பரவலான எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களையும் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தலின்படி, இம்மசோதாவை திரும்பப் பெற்று விரிவான மறு ஆய்வு செய்வதாக அமைச்சர் கோவி. செழியன் அறிவித்தார். அதன்படி, பிப்.20 அன்று சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. இனி கல்வியா ளர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடம் கருத்து பெற்ற பின்னர், உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p>
