பொறையாரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>பொறையாரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்</strong></p>
<p>மயிலாடுதுறை, டிச.21- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், பொறையார் நிவேதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.</p>
