தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!
30 May 2026, 9:36 pm

தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!

தகவல் ஆணையம் உத்தரவு சென்னை, மே 30- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகைகளிலும் இணையதளங்களிலும் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 4 ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்படவிருக்கும் நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

கோவையைச் சேர்ந்த லியாகத் அலி 2022 அக்டோபரில் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டண விவரங்களைக் கோரி தகவல் உரிமை விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த மனு அதிகாரிகளால் சரியாக கை யாளப்படாமல் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டதால் மேல் முறையீடு செய்யப்பட்டது.

விசாரணைக்கு வந்த இம்மனுவில் மாநில தகவல் ஆணை யர் இளம்பரிதி, இரு வார காலத்திற்குள் கட்டணமின்றி விரைவு தபால் மூலம் தகவல்களை வழங்க உத்தரவிட்டார்.

மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வகுப்புவாரியான கட்டண விவரங்களை பள்ளி நுழைவாயில் விளம்பரப் பலகையிலும், அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களிலும் வெளியிட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களும் ஆய்வறிக்கையை ஜூன் 15 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஜூன் 16 ஆம் தேதி நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையர் இளம்பரிதி உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்கள் செலுத்தும் ஒவ்வொரு பைசாவிற்கும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தி யுள்ளது.