முந்தய பக்கம்

கல்வி கட்டணத்தை காட்சி படுத்துவது கட்டாயம் - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!

2 Jun 2026, 12:36 pm
கல்வி கட்டணத்தை காட்சி படுத்துவது கட்டாயம் - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!

தனியார் பள்ளிகள் தங்களின் கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தில் உள்ள தகவல் பலகையில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு வகுப்பிற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்கள் மாணவர்கள், பெற்றோர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் பலகையில் தெளிவாக வெளியிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளதை உறுதி செய்யும் வகையில், தகவல் பலகையில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மாணவர் சேர்க்கைக்காக வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களிலும் வகுப்புவாரியாக கல்விக் கட்டண விவரங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram