பால் விலையை உயர்த்திய தனியார் நிறுவனங்கள்
8 Jul 2026, 8:47 pm
<p><strong>பால் விலையை உயர்த்திய தனியார் நிறுவனங்கள்</strong> </p><p>சென்னை, ஜூலை 8 - பால் விலையை, அரை லிட் டருக்கு 2 ரூபாயும், ஒரு லிட்ட ருக்கு 3 ரூபாய் வரையும் உயர்த்தி, தனியார் பால் நிறுவனமான ‘ஆரோக்யா’ அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி இறுதி வாரத்தில் அனைத்து தனி யார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விலை யை லிட்டருக்கு ரூ. 2 உய ர்த்தியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக விலை உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, 500 மில்லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ. 29-இல் இருந்து ரூ. 31 ஆகவும், நிலைப்படுத்தப் பட்ட பால் ரூ. 35-இல் இருந்து ரூ. 37 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப் பட்ட பால் ரூ. 39-இல் இருந்து ரூ. 41 ஆகவும் விலை உய ரும். 1 லிட்டர் சமன்படுத்தப் பட்ட பால் ரூ. 54-இல் இருந்து ரூ. 57 ஆகவும், நிலைப்படு த்தப்பட்ட பால் ரூ. 66-இல் இருந்து ரூ. 69 ஆகவும், கொழுப்புச் சத்து செரிவூட்டப் பட்ட பால் ரூ. 73-இல் இருந்து ரூ. 76 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல, 500 கிராம் ஹட்சன் தயிர் விலை, ரூ.42-ல் இருந்து ரூ. 44 ஆக வும், ஆரோக்யா தயிர் விலை ரூ.40-இல் இருந்து ரூ.42 ஆக வும் உயர்த்தப்பட்டுள்ளது.</p>
