தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவியர் விடுதி அருகே தனியார் மதுபானக்கூடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் டாஸ்மாக் நிர்வாகம்

4 Feb 2026, 5:19 pm
மாணவியர் விடுதி அருகே தனியார் மதுபானக்கூடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் டாஸ்மாக் நிர்வாகம்
<p><strong>மாணவியர் விடுதி அருகே தனியார் மதுபானக்கூடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் டாஸ்மாக் நிர்வாகம்</strong></p> <p>கோவை, பிப்.4- ஒண்டிபுதூரை அடுத்த திரு வள்ளுவர் நகர் பகுதியில், போலி யான முகவரியில் அரசு மாணவி கள் விடுதி அருகே தனியார் எப்எல் 2 &nbsp;மதுபானக்கூடம் அமைக்கப்படுவ தற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு &nbsp;தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் மது பானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் வேலையில் தமிழக அரசு ஒரு புறம் ஈடுபட்டுக் கொண்டி ருக்க, மறுபுறம் டாஸ்மாக் நிர்வா கம், எப்எல்2 என்கிற வடிவில் நவீன மதுபானக்கூடங்களை திறந்து வரு வது சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. கோவை, ஒண்டிபுதூர் அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில், செயல்பட்டு வரும் தமிழக அரசின் சமூக நீதி விடுதியில் 200-க்கும் &nbsp;மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த &nbsp;விடுதிக்கு மிக அருகிலேயே பள்ளி வாசல் ஒன்றும் அமைந்துள்ள நிலையில், விடுதிக்கு முன்புறம் உள்ள திருமண மண்டபத்தை டாஸ்மாக் மனமகிழ் மன்றமாக (Club) மாற்றுவதற்கு தற்போது உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலறிந்த அப்பகுதி மக்களும், மாணவிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப் பாக, எம்ஜிஆர் நகர் என அப்பகுதி யில் இல்லாத பெயரில் போலியான முகவரியில் தனியார் மனமகிழ் மன்றம் திறக்க உரிமம் வழங்கி யுள்ளனர். மாணவிகளின் பாது காப்பு மற்றும் வழிபாட்டுத் தலத் தின் புனிதத்தை கருத்தில் கொள் ளாமல் இத்தகைய அனுமதி வழங்கப்பட்டிருப்பது கண்டனத் திற்குரியது என அவர்கள் தெரி வித்துள்ளனர். &nbsp;மதுக்கடைகளை குறைப்ப தாக கூறிவிட்டு, அரசு மதுக்கடை களை மூடிவிட்டு தனியாருக்கு தாராளமாக மனமகிழ் மன்ற உரி மங்களை டாஸ்மாக் நிர்வாகம் வழங்கி வருவது அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் செயலாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த நட வடிக்கையை, மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மக்கள் நடமாட்டமும் மாணவிகள் தங்குமிடமும் நிறைந்த இப்பகுதியிலிருந்து மது பானக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.