திருப்பூரில் ஆதரவற்ற முதியவருக்கு தனியார் அறக்கட்டளை அடைக்கலம்
26 Dec 2025, 4:32 pm
<p><strong>திருப்பூரில் ஆதரவற்ற முதியவருக்கு தனியார் அறக்கட்டளை அடைக்கலம்</strong></p>
<p>திருப்பூர், டிச.26 - திருப்பூரில் ஆதரவின்றி பரிதவித்த முதி யவருக்கு நியூ தெய்வா சிட்டி அறக்கட் டளை மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா போத்தம்பாளையத்தில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம் இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பூர் அனுப்பர்பா ளையம் பகுதி தண்ணீர்பந்தல் காலனி சிக் னல் புறவழிச்சாலை சந்திப்பில், பிளாட்பார வாழைப்பழக் கடையில் மூர்த்தி, (வயது 65) என்பவர் வேலை பார்த்து வந்தார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை. உறவினர்கள் பற்றிய விபரமும் தெரியவில்லை. தள்ளுவண்டி வாழைப்பழக் கடையில், கடந்த 5 வருடங்களாக வேலை பார்த்து வந்த தாக இவரது கடை உரிமையாளர் செவ்வி தெரிவித்தார். எனினும் கடந்த சில மாதங்க ளாக உடல் நலக் குறைவு காரணமாக இவர் படுத்த படுக்கையாகி விட்டார் என்று செல்வி மறுவாழ்வு இல்ல நிர்வாகிக்கு தெரிவித்தி ருக்கிறார். இதனைத் தொடர்ந்து நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைத்து பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி 11 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.செல்வ ராஜிடம் ஒப்புதல் பெற்றும், கடந்த டிசம்பர் 23 அன்று திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில், தெரியப்படுத்தி காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறப்பட்டது. பின்னர் ஆதரவற்ற, உடல் நலம் பாதிக்கப் பட்ட மூர்த்தியை தண்ணீர் பந்தல் காலனி சிக் னல் புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து பொதுமக்களின் ஆதரவோடு போதம்பாளை யத்தில் உள்ள அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அழைத்து வந்தனர். இவரை மறு வாழ்வு இல்லத்தில் தங்க வைத்து, முடித்தி ருத்தம், முகச்சவரம் செய்து குளிக்க வைத்து தூய்மைப்படுத்தி புத்தாடைகள் அணிய வைத்தனர். உணவு குடிநீர் வழங்கி நிரந்தர பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்குவதாக அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ந. தெய்வராஜ் தெரிவித்துள்ளார்.</p>
